28)சங்க காலத்தில் பட்டம் சூட்டப்படும் விழா எவ்வாறு அழைக்கப்பட்டது-அரசு கட்டில் ஏறுதல் அல்லது முடிசூட்டு விழா
29) சங்க காலத்தில் நிலவருவாய் எவ்வாறு அழைக்கப்பட்டது-இறை
30) ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு-ஐம்பெருங்குழு
31) 8 உறுப்பினர்களை கொண்ட குழு-எண்பேராயம்
32) சங்க காலத்தில் படை தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்-தானைத் தலைவன்
33) தோமரம் எனப்படுவது-எரியீட்டி (சற்று தொலைவிலிருந்து எதிரியின் மீது ஏவுகணையை போன்று வீசப்படுவது ஆகும்)
34) சங்க காலத்தில் ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த இடம் எவ்வாறு அழைக்கப்பட்டது-படை கொட்டில்
35)
மண்டலம்>நாடு>கூற்றம்>கிராமம்
36) பொருத்துக
அ)பேரூர் -பெரிய கிராமம்
ஆ)சிற்றூர் -சிறிய கிராமம்
இ)மூதூர் -பழமையான கிராமம்
37) கடற்கரையோர நகரங்களை எவ்வாறு அழைக்கப்பட்டது-பட்டினம்
38) துறைமுகங்களை குறிக்கும் பொதுவான சொல்-புகார்
39)மருதநிலம் மின்புலம் என அழைக்கப்பட்டது. நெய்தல் தவிர மற்றவை என அழைக்கப்பட்டது.
40) குறிஞ்சி -மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் -வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை -வறண்ட நிலம்
41) குறிஞ்சி -வேட்டையாடுதல் /சேகரித்தல்
முல்லை -ஆநிரை மேய்த்தல்
மருதம்- வேளாண்மை
நெய்தல் -மீன்பிடித்தல்/ உப்பு உற்பத்தி
பாலை- வீரச் செயல்கள்
42) குறிஞ்சி -குறவர் ,குறத்தியர்
முல்லை- ஆயர் ,ஆய்ச்சியர்
மருதம் -உழவன் ,உழத்தியர்
நெய்தல் -பரதவர் ,நுளத்தியர்
பாலை -மறவர் ,மறத்தியர்
43) குறிஞ்சி -முருகன்
முல்லை -மாயோன்
மருதம் -இந்திரன்
நெய்தல் -வருணன்
பாலை -கொற்றவை
44) சங்க காலத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை-40
45) சங்ககால பெண்பாற் புலவர்கள்-ஔவையார் ,வெள்ளிவீதியார் ,காக்கைபாடினியார் ,ஆதிமந்தியார் ,பொன்முடியார்
46) மக்களின் முதன்மை கடவுள்-சேயோன்அல்லது முருகன்
47) போரில் மரணமடைந்த வீரனின் நினைவை போற்றுவதாக நடப்பட்டவை-வீரக் கல் /நடுகல்
48) இசையின் ஏழு ஸ்வரங்கள் குறித்து பெரும் புலமை பெற்றவர்-கரிகாலன் (ஏழிசை வல்லான்)
49) எகிப்து அரசன் இரண்டாம் ராம்செஸ் இன் பதப்படுத்தப்பட்ட உடலில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய பொருள்-மலபார் கரு மிளகு
50) இந்திய பட்டானது எடைக்கு எடை தங்கம் கொடுத்து பெற தகுதியானது என கூறியவர்-ரோமப் பேரரசர் ஆரிலியன்
51)முசிறியை இந்தியாவின் முதல் பேரங்காடி என தனது நூலில் குறிப்பிட்டவர்-பிளினி (இயற்கை வரலாறு)
52) அகஸ்டஸ் கடவுளுக்காக கோவில் கட்டப்பட்டு இருந்த இடம்-முசிறி
53)அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த நடிகருக்கும் முசிறியைச் சேர்ந்த வணிகருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட வணிக ஒப்பந்தம் குறித்து எங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் (வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது)
54) சங்ககாலம் சரிவை சந்திக்க தொடங்கிய நூற்றாண்டு-கிபி 3 நூற்றாண்டு
55) சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழகத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்தவர்கள்-களப்பிரர்கள்
56)சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளின் அறிமுகத்தால் உருவான புதிய எழுத்து முறை எது-வட்டெழுத்து முறை
Post a Comment