1) மதுரை பாண்டிய அரசர்களின் ஆதரவில் தழைத்தோங்கிய தமிழ் புலவர்களின் குழுமத்தை சுட்டும் சொல்-சங்கம்
2) தமிழ் செவ்வியல் இலக்கியங்களையும் பண்டைக்கால தமிழ் நூல்களையும் மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளைச் செலவிட்டவர்கள்-ஆறுமுக நாவலர், தாமோதரம்பிள்ளை, உ வே சாமிநாதர்
3) பொருத்துக
அ)இயற்கை வரலாறு- பிளினி
ஆ) புவியியல் -தாலமி
இ )இண்டிகா -மெகஸ்தனிஸ்
4) தமிழ் மொழியானது லத்தீன் மொழியின் அளவிற்கு பழமையானது எனக் கூறியவர்-ஜார்ஜ் எல் ஹார்ட்
5) சங்க காலத்தின் போது தமிழக பகுதிகளை ஆட்சி புரிந்தவர்கள்-மூவேந்தர்கள்
6) சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்கும் நூல்-பதிற்றுப்பத்து
7) வட இந்தியாவின் மீது படையெடுத்து சென்று சேர அரசன்-சேரன் செங்குட்டுவன்
8) சிலப்பதிகார காவியத்தில் கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தவர்-சேரன் செங்குட்டுவன்
9) பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர்-சேரன் செங்குட்டுவன்
10) இளங்கோவடிகளின் தம்பி-சேரன் செங்குட்டுவன்
11) தனது பெயரில் நாணயங்களை வெளியிட்ட சேர அரசர்-சேரல் இரும்பொறை
12) முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்-உதியன் சேரலாதன் ,இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்்்், சேரன் செங்குட்டுவன் ,சேரல் இரும்பொறை
13) சோழநாட்டின் மையப்பகுதியாக விளங்கியது-காவிரி கழிமுகப் பகுதி
14) சோழ அரசர்களில் மிகவும் புகழ்பெற்றவர்-கரிகால் வளவன்
15)சேரர் பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த 11 வேளிர்களின் கூட்டுப் படையை தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்க்கடித்தவர்-கரிகாலன்
16)கரிகாலனின் ஆட்சியின் போது நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்கும் நூல் எது-பட்டினப்பாலை
17) கரிகாலன் கட்டிய கல்லணை எத்தனை ஏக்கர் நிலத்திற்கு நீர் பாசன வசதியை வழங்கியது-69000
18) இன்றைய தென் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்-பாண்டியர்கள்
19) மிகவும் புகழ்பெற்ற போர் வீரராக போற்றப்படும் பாண்டிய அரசன்-நெடுஞ்செழியன்
20) சேரர் சோழர் 5 வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப் படையை தலையாலங்கானம் எனுமிடத்தில் தோற்க்கடித்தவர்-நெடுஞ்செழியன்
21) கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுபவர்-நெடுஞ்செழியன்
22) பல வேத வேள்விகளை நடத்தியதை கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட பாண்டிய அரசர்-முதுகுடுமிப் பெருவழுதி
23) சேர அரசு அதிகாரத்தின் சின்னங்கள்-
மாலை- பனம் பூ
துறைமுகம்- முசிறி/ தொண்டி
தலைநகர் -வஞ்சி /கரூர்
சின்னம் -வில் ,அம்பு
24) சோழ அரசின் சின்னங்கள்-
மாலை -அத்திப்பூ
துறைமுகம் -புகார்
தலைநகர் -உறையூர்/ புகார்
சின்னம் -புலி
25) பாண்டிய அரசின் சின்னங்கள்
மாலை -வேப்பம்பூ மாலை
துறைமுகம் -கொற்கை
தலைநகர்- மதுரை
சின்னம் -இரண்டு மீன்கள்
26) பண்டைய காலத் தமிழகத்தில் ஆட்சி செய்த நிலவுடைமை பிரிவினர்-வேளிர்கள்
Post a Comment