Important history notes part 1

 1)பல்லவர் கலை பற்றி அறிய உதவும் கல்வெட்டுகள் யாவை-மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு


2) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் செப்பேடு-காசக்குடி செப்பேடு


3) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் இலக்கியங்கள்-மத்தவிலாசப் பிரகசனம், அவந்தி சுந்தரி கதை, கலிங்கத்துப்பரணி, பெரியபுராணம், நந்திக்கலம்பகம்


4) பல்லவர் கலை பற்றி அறிய உதவும் அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள்


5) இரண்டாம் சிம்மவர்மனின் மகன்-சிம்மவிஷ்ணு (கி.பி550)


6) சிம்ம விஷ்ணுவின் மகன்-முதலாம் மகேந்திரவர்மன்


7) முதலாம் மகேந்திரவர்மனின் மகன்-முதலாம் நரசிம்மவர்மன்


8) இரண்டாம் நரசிம்ம வர்மனின் வேறு பெயர்-ராஜசிம்மன்


9) கடைசி பல்லவ மன்னர்-அபராஜிதன்


10) மன்னர்களின் காலம்

மகேந்திரவர்மன்-(கி.பி 600-630)

முதலாம் நரசிம்மவர்மன்-கி.பி (630-668)

இரண்டாம் நரசிம்மவர்மன்-கி.பி (695-722)


11) களப்பிரர்களை அழைத்து ஒரு வலுவான பல்லவ அரசை உருவாக்கியவர்-சிம்மவிஷ்ணு


12) முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி-பரஞ்சோதி (வாதாபி படையெடுப்பில் பல்லவர் படைக்குத் தலைமை ஏற்று நடத்தினார் ,வெற்றிக்குப் பின்னர் சிவ பக்தராக மாறினார்)


13) முதலாம் மகேந்திரவர்மன் ஐ சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர்-திருநாவுக்கரசர்


14) திராவிடக் கட்டடக் கலைக்கு ஒரு புதிய பாணியை அறிமுகம் செய்தவர்-முதலாம் மகேந்திரவர்மன்


15) திராவிட கட்டட கலை பாணி எவ்வாறு அழைக்கப்படுகிறது-மகேந்திர பாணி


16) பௌத்தத்தை இழிவுபடுத்துவதாக கருதப்படும் நாடக நூலான மத்தவிலாசப் பிரகசனத்தை சமஸ்கிருத மொழியில் எழுதியவர் யார்-முதலாம் மகேந்திரவர்மன்


17) முதலாம் மகேந்திரவர்மனை வெற்றிகொண்டு வெங்கி எனும் பகுதியை கைப்பற்றியவர் யார்-சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி


18) வாதாபியை தீக்கிரையாக்கி இரண்டாம் புலிகேசியை போரில் தோற்கடித்தவர்-முதலாம் நரசிம்மவர்மன்


19) காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டியவர்-இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்)


20) அவனி சிம்மர் என அழைக்கப்படுபவர்-சிம்மவிஷ்ணு


21) முதலாம் மகேந்திரவர்மனுக்கு வழங்கப்பட்ட பட்டங்கள்-சங்கீத ஜதி, மத்தவிலாசம், குணபாரன், சித்திரகாரப்புலி, விசித்திர சித்தன்.


22) முதலாம் நரசிம்மவர்மன் உககு வழங்கப்பட்ட பட்டங்கள்-மாமல்லன், வாதாபி கொண்டான்


23)உலக பாரம்பரிய சின்னங்கள் அட்டவணையில் மாமல்லபுரம் சேர்க்கப்பட்ட ஆண்டு-1984


24) பல்லவர் கட்டடக்கலையின் வகைகள்-

அ)பாறை குடைவரைக் கோயில்கள்-மகேந்திரவர்மன் பாணி

ஆ) ஒற்றைக்கல் ரதங்களும் சிற்பம் மண்டபங்களும்-மாமல்லன் பாணி

இ) கட்டுமான கோவில்கள்-ராஜசிம்மன் பாணி, நந்திவர்மன் பாணி


25) கூற்று; மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்டவர் ரதங்கள் ஒற்றைக்கல் ரதங்கள் என அழைக்கப்படுகின்றன

காரணம்; ஒவ்வொரு ரதமும் ஒவ்வொரு தனி களலிருந்து செதுக்கப்பட்டுள்ளன

 மற்றும் ஒவ்வொரு ரதமும் ஐந்து வகையான கோவில் கட்டட பணியை உணர்த்துகின்றன.


(விடை; கூற்று காரணம் இரண்டும் சரி)


26)உலகில் செதுக்கப்பட்ட திறந்தவெளி சிற்பங்களில் மிகப் பெரியது எது-மாமல்லனின் பெருந்தவ வடிவ சிற்பம்


27)ராஜசிம்மஸ்வரம் என அழைக்கப்படும் கோவில்-கைலாசநாதர் கோவில்


28) காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்ட பெருமாள் கோவில் எவ்வகையைச் சார்ந்தது-நந்திவர்மன் பாணி


29) நியாய பாஷ்யா எனும் நூலை எழுதியவர்- வாத்ஸ்யாயர்(காஞ்சி கடிகையில் ஆசிரியராக இருந்தவர்)


30) தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடு -தட்சிணசித்திரம் (முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக்காலத்தில் தொகுக்கப்பட்டது)


31)முதலாம் நரசிம்மவர்மனின் அவையை அலங்கரித்த மாபெரும் சமஸ்கிருத அறிஞர்-தண்டின்


32) தசகுமார சரிதம் என்னும் நூலை எழுதியவர்-தண்டின்


33) சிம்ம விஷ்ணுவின் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருத அறிஞர்-பாரவி


34)கிராதார்ஜீனியம் என்னும் வடமொழி காப்பியத்தை வடிவமைத்தவர்-பாரத


35) பல்லவர் காலத்தில் எழுதப்பட்ட சமய இலக்கியங்கள்-நாயன்மார்களால் இயற்றப்பட்ட தேவாரம் ,ஆழ்வார்களால் படைக்கப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம்


36) இரண்டாம் நரசிம்மவர்மனால் ஆதரிக்கப்பட்டவர்-பெருந்தேவனார் (மகாபாரதத்தை பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தவர்)


37) இசையில் பல்லவர் கொண்டிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்தும் இசை குறித்த கல்வெட்டுகள் யாவை-குடுமியான் மலை, திருமயம் கோவில்களில் உள்ளது


38) புகழ்பெற்ற இசைக் கலைஞரான ருத்ராட்சாரியார்  யாருடைய சமகாலத்தவர்-முதலாம் மகேந்திரவர்மன்


சாளுக்கியர்


39) சாளுக்கியர்களின் தலைநகர்-வாதாபி (பதாமி)


40)சாளுக்கியர்களில் காணப்பட்ட மூன்று வெவ்வேறு சுதந்திர அரசுகள் யாவை-

அ) வாதாபி சாளுக்கியர்கள்

ஆ) வெங்கிச் சாளுக்கியர்கள் (கீழைச் சாளுக்கியர்கள்)

இ)கல்யாணிச் சாளுக்கியர்கள் (மேலைச் சாளுக்கியர்கள்)


41)வாதாபி குகைக் கல்வெட்டு- மங்களேசன்


42)அய்கோல் கல்வெட்டு-இரண்டாம் புலிகேசி

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post