Important history notes part 2

 43) சாளுக்கியர்களை பற்றிய கல்வெட்டுகள்-மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, பட்டடக்கல் விருபாக்ஷா கோவில் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் கல்வெட்டு.

44) சாளுக்கியர்களை பற்றிய அயலவர் குறிப்புகள்-யுவான் சுவாங்கின் குறிப்புகள்


45) பிஜப்பூர் மாவட்டம் பட்டடக்கல் குறுநில மன்னராக இருந்த சாளுக்கிய அரசர்-முதலாம் புலிகேசி


46) முதலாம் புலிகேசியின் மகன்-முதலாம் கீர்த்திவர்மன்


47) சாளுக்கிய மன்னர்களின் காலம்-முதலாம் கீர்த்திவர்மன் (கி.பி.566-597)

இரண்டாம் புலிகேசி-(கி.பி.610-642)

முதலாம் விக்ரமாதித்தன்-(கி.பி.655-680)



48) அய்கோல் கல்வெட்டு பற்றிய குறிப்புகள்;

✍️ பாகல்கோட் மாவட்டம் கர்நாடகா லவ் உள்ளது.

✍️ அய்கோலில் உள்ள மேகுதி கோவிலில் உள்ளது.

✍️சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் அவைக்களப் புலவரான ரவி கீர்த்தி என்பவரால் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது.

✍️இக்கல்வெட்டு ஹர்ஷவர்தனர் இரண்டாம் புலிகேசி யால் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடுகின்றது.


49) சாளுக்கிய வம்சத்தின் வலிமை பெற்ற அரசர்-இரண்டாம் புலிகேசி


50) இரண்டாம் புலிகேசியின் அவைக்கு தூதுக்குழு அனுப்பிவைத்த பாரசீக அரசர்-இரண்டாம் குஸ்ரு


51)கி.பி.624 காலப்பகுதியில் வெங்கி அரசைக் கைப்பற்றிய தன்னுடைய சகோதரர் விஷ்ணுவர்தனுக்கு வழங்கியவர்-இரண்டாம் புலிகேசி


52) முதல் கீழைச் சாளுக்கிய அரசன் யார்-விஷ்ணுவர்த்தனர்


53) இரண்டாம் கீர்த்திவர்மன் ஐ போரில் தோற்கடித்தனர்-தந்தி துர்க்கர்(ராஷ்டிரகூட வம்ச அரசை நிறுவியவர்)


54) தலைநகரை மன்னிய கேட்டதிலிருந்து கல்யாணிக்கு மாற்றியவர்-முதலாம் சோமேஸ்வரர்(கல்யாணி மேலைச் சாளுக்கியர்)


55)வெசரா பாணியிலான கோவில் விமானங் களை கட்டும் முறை யாருடைய காலத்தில் வளர்ச்சி பெற்றது-சாளுக்கியர்கள்


56) வாதாபியில் உள்ள விஷ்ணு கோவிலை கட்டியவர்-மங்களேசன்


57) ஓவியங்களில் சாளுக்கியர் பின்பற்றிய பாணி-வாகடகர் பாணி


58)பாரசீக தூதுக்குழுவை இரண்டாம் புலிகேசி வரவேற்பது போன்ற காட்சி எங்கு உள்ளது-அஜந்தா ஓவியத்தில்


59) காஞ்சி கைலாசநாதர் கோவிலை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட கோவில்-விருபாக்ஷ கோவில்


ராஷ்டிரகூடர்கள் (8-10 ம் நூற்றாண்டு வரை)


60) ராஷ்டிரகூடர்களின் தாய்மொழி-கன்னடம்


61) ராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர்-தந்தி துருக்கர்


62) தந்திதுர்கரை அடுத்து பதவி ஏற்றவர்-முதலாம் கிருஷ்ணர்


63) ராஷ்டிரகூட அரசர்களில் தலைச்சிறந்த அரசர்-அமோகவர்ஷர்


64) அமோகவர்ஷரின் காலம்-(கி.பி.814-878)


65) அமோகவர்ஷரை சமணத் துறவியாக மாற்றியவர்-ஜினசேனர்


66) அமோகவர்ஷரின் மகன்-இரண்டாம் கிருஷ்ணர்


67)கி.பி.916ல் பராந்தகச் சோழனால் வல்லம் (தற்போதைய திருவல்லம் வேலூர் மாவட்டம்) போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்-இரண்டாம் கிருஷ்ணர்


68)சாந்து இல்லாமல் கற்களை மட்டுமேகொண்டு கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பத்தை மேம்படுத்தியவர்கள்-சாளுக்கியர்கள்


69) வாதாபியில் உள்ள விஷ்ணு கோவிலை கட்டியவர்-சாளுக்கிய அரசன் மங்களேசன்


70) கல்யாணி மேலைச் சாளுக்கியரின் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு-இட்டகியில் உள்ள மகாதேவர் கோவில்


71) ராஷ்டிரகூட வம்சத்தின் திறமைவாய்ந்த கடைசி அரசர்-மூன்றாம் கிருஷ்ணர்


72) சோழர்களை தக்கோலம் போர்க்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரை கைப்பற்றியவர்-மூன்றாம் கிருஷ்ணர்


73) ராமேஸ்வரத்தின் கிருஷ்ணேஷ்வரர் கோவிலை கட்டியவர்-மூன்றாம் கிருஷ்ணர்


74) நாட்டை சரியான முறையில் வைத்திருந்த இராஷ்டிரகூட கடைசி அரசர்-மூன்றாம் கோவிந்தனாவார்


75) கன்னட மொழியின் முதல் கவிதை நூல்-கவிராஜ மார்க்கம்


76) கவிராஜ மார்க்கத்தை இயற்றியவர்-அமோகவர்ஷர்


77) கன்னட இலக்கியத்தின் மூன்று ரத்தினங்கள் எனக் கருதப்படுபவர்கள்-ஆதிகவி பம்பா ,ஸ்ரீ பொண்ணா, ரன்னா


78) ஆதிகவி பம்பா வால் இயற்றப்பட்ட நூல்கள்-ஆதிபுராணம்,விக்கிரமார்ஜுன விஜயம்


79)முதல் சமண தீர்த்தங்கரரான ரிஷபதேவர் இன் வாழ்க்கையை சித்தரிக்கும் நூல்-ஆதி புராணம்


80) மகாபாரதத்தின் மீள் தருகை-விக்கிரமார்ஜுனவிஜயம்


81) தன்னை ஆதரித்த சாளுக்கிய அரிகேசரியை அர்ஜுனனின் பாத்திரத்தில் பொருத்தி எழுதியவர்-பம்பா


82)ராஷ்டிரகூடர்களின் கலை மற்றும் கட்டிடக்கலை காணப்படும் இடங்கள்-எல்லோரா, எலிபெண்டா


83) எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் யாருடைய ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது-மூன்றாம் கிருஷ்ணர்


84) எல்லோரா கைலாசநாதர் கோவில் பற்றிய குறிப்புகள்-✍️ கட்டடக்கலை பிரம்மாண்டதிர்க்கும் சிற்பங்களின் அற்புதங்களுக்கும் பெயர் பெற்றது.

✍️60,000 சதுர அடிகள் பரப்பளவைக் கொண்டுள்ளது

✍️ விமானத்தின் உயரம் 90 அடி

✍️ மாமல்லபுரம் கடற்கரை கோவிலின் சாயலை பெற்றுள்ளது

✍️ திராவிட கட்டடக்கலை கூறுகளை கொண்டுள்ளது


85) எலிபண்டா தீவு பற்றிய குறிப்புகள்

✍️இயற்பெயர் -ஸ்ரீ பூரி  

✍️உள்ளூர் மக்களால் காரப்புரி என்று அழைக்கப்படுகிறது.

✍️மும்பைக்கு அருகில் உள்ள ஒரு தீவு.

✍️இத்தீவில் பெரிய யானையின் உருவத்தை கண்ட போர்ச்சுக்கீசியர்கள் இதற்கு எலிபண்டா தீவு என பெயரிட்டனர்.

✍️திரிமூர்த்தி (மூன்று முகங்கள் கொண்ட )சிவன் சிலை மற்றும் நுழைவு வாயிலில் காணப்படும் துவாரபாலகர்கள் சிலை குறிப்பிடத்தக்கவை.


86) சமண நாராயணர் கோவிலும் காசி விஸ்வேஸ்வரர் கோவிலையும் கட்டியவர்கள்-ராஷ்டிரகூடர்கள்


87) இஸ்லாமிய பேரரசின் மகத்தான நகரம்-பாக்தாத்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post