1. பண்டைய தமிழகத்தில் பெருங்கற்கால பண்பாடு நிலவியதற்கான சான்று
A. இரும்பை பயன்படுத்தியது
B. கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் பயன்படுத்தியது
C. தங்கம் பயன்படுத்தியது
D. இவை அனைத்தும்
2. தென் இந்தியாவின் பெருங்கற்கால பண்பாடு தொடங்கிய ஆண்டு
A. கி. மு. 600 - கி. பி. 100
B. கி. மு.700- கி. மு.100
C. கி. மு.600 - கி. மு.100
D. கி.பி.700 - கி.பி.100
3. Chalcolithic culture என்பது
A. செம்பு கற்காலம்
B. வெண்கலக் காலம்
C. இரும்புக் காலம்
D. வேத காலம்
4. இறந்தவர்களை புதைக்கும் பழக்கத்தை கொண்டிருந்த காலம்
A. வேத கால பண்பாடு
B. பெருங்கற்கால பண்பாடு
C. புதிய கற்கால பண்பாடு
D. கற்கால பண்பாடு
5. ஆதிச்ச நல்லூர் எந்த மாவட்டத்தில் உள்ளது
A. தூத்துக்குடி B. சிவகங்கை
C. வேலூர். D. ஈரோடு
6. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகள் எந்த காலத்தைச் சேர்ந்தது
A. பொ.ஆ.மு.300
B. பொ.ஆ.மு.100
C. பொ.ஆ.மு.200
D. பொ.ஆ.மு.400
7. தமிழ்- பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்
A. பையம்பள்ளி
B. கீழடி. C. பொருந்தல்
D. கொடுமணல்
8. இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்க்கு எஃகு ஏற்றுமதி செய்யப் பட்டது குறித்தும் அலெக் சாண்ரிட்யா துறைமுகத்தில் இவற்றின் மீது வரி விதிக்கப் பட்டது குறித்தும் குறிப்பிடுவர்
A. பெரிப்பிளஸ் B. சாணக்கியர்
C. தாலமி D. இவை ஏதுமில்லை
9. எந்த வகையான கண்ணாடி மணிகள் பொருந்தல் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது
A. வெள்ளை B. நீலம், சிவப்பு
C. மஞ்சள், பச்சை D. இவை அனைத்தும்
10. பொருந்தல் இட மக்களின் முக்கிய உணவு
A. கோதுமை B. அரிசி C. தானியம்
D. இவை அனைத்தும்
11. இரும்பு உருகப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ள இடம்
A. பையம்பள்ளி B. கொடுமணல்
C. பொருந்தல். D. கீழடி
12. கொடுமணல் இடம்பெற்றுள்ள நூல்
A. சிலப்பதிகாரம் B. மணிமேகலை
C. பதிற்றுப்பத்து D. பரிபாடல்
13. 300க்கும் அதிகமான தமிழ்- பிராமி எழுத்துக்கள் கொண்ட மட்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்
A. கொடுமணல் B. பையம்பள்ளி
C. பொருந்தல் D. ஆதிச்ச நல்லூர்
14. கற்திட்டைகள் காணப்பட்ட இடங்கள்
A. வீரராகவபுரம் B. கும்மாளமருதுபட்டி
C. நரசிங்கம்பட்டி D. இவை அனைத்தும்
15. நினைவுகற்கள் இன்றும் உள்ளது இடங்கள்.
A. சிங்கரி பாளையம்
B. வெம்பூர்
C. குமரிக்கல் பாளையம்
D. இவை அனைத்தும்
16. நடுகற்கள் அமைந்துள்ள இடங்கள்
A. மானூர் B. வெள்ளாளன் கோட்டை
C. புலிமான் கோம்பை
D. இவை அனைத்தும்
17. Deity என்பதன் பொருள்
A. இரத்த உறவு. B. சமூகம்
C. உலோகவியல்
D. ஆண் /பெண் தெய்வம்
18. கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்
A. கொழு முனைகள். B. பகடை
C. சுழல் அச்சு
D. தங்க ஆபரணங்கள்
19. கொடுமணலில் கண்டெடுக்கப்பட்ட பொருள்
A. பகடை. B. கொழு முனைகள்
C. சுழல் அச்சு D. தங்க ஆபரணங்கள்
20. வெண்கல உருவங்களான புலி, யானை,மான் ஆகியவை கிடைத்த இடங்கள்
A. ஆதிச்ச நல்லூர் B. பையம்பள்ளி
C. கொடுமணல் D. கீழடி
Post a Comment