6th standard(history)

1. பண்டைக்காலத் தமிழ் நூல்களை மீட்டு வெளியிடுவதில் பல ஆண்டுகளை செலவிட்டவர் களில் சரியானதை தேர்ந்தெடுக்க???? 
 A. ஆறுமுக நாவலர் 
 B. தாமோதரம் பிள்ளை 
 C. உ. வே. சாமிநாத அய்யர்
 D. அனைத்தும்

 2. சங்க காலம் பற்றி அகழாய்வு நடந்த இடங்களில் தவறானவை கண்டறிக????? A. ஆதிச்சநல்லூர், உறையூர், கொற்கை
 B. அரிக்கமேடு, கொடுமணல் 
 C. அழகன் குளம், புகார்   D. கரூர் 

 3. சங்க காலத்தில்............ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது???? 
 A. பாண்டிய   B. பல்லவ   C. சோழ   D. சேர 

 4. யார் தன்னை எதிர்த்த சேரர், சோழர் மற்றும் 11 வேளிர் தலைவர்களின் கூட்டு படையை வெண்ணி என்னும் சிற்றூரில் தோற்கடித்தவர் யார்?????
 A. பராந்தகன்.   B. இராஜேந்திர சோழன் C. கரிகாற் சோழன்   D. இராஜராஜன்

 5. சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்கு திருவிதாங்கூர் கொச்சி மற்றும் தெற்கு மலபார் மற்றும் தெற்கு மண்டலப் பகுதிகளை ஆண்டதாக கூறும் நூல் எது???? 
 A. பதிற்றுப்பத்து    B. புறநானூறு 
 C. பரிபாடல்      D. அகநானூறு

 6. தமிழ் மொழியானது இலத்தீன் மொழி அளவிற்கு பழமையானது என்று கூறியவர் யார்???? 
 A. வீரமாமுனிவர்   B. சீகன்பால்கு
 C. ஜி. யு. போப்    D. ஜார்ஜ் எல் ஹார்ட் 

 7. முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்களில் தவறானது எது???? 
 A. சென்னி   B. செழியன்   C. செம்பியன் 
 D. வளவன், கிள்ளி 

 8. சங்க காலப் பெண் பாற் புலவர்களில் சரியானவை எது????? 
 A. வெள்ளி வீதியார்,பொன்முடி யார்.
 B. ஔவையார் 
 C. காக்கை பாடினியார், ஆதிமந்தையார் D. அனைத்தும் சரி.

 9. தவறானதை தேர்ந்தெடுக்க??? 
 A. சேரரின் துறைமுகம்-முசிறி, தொண்டி;மாலை-பனம் பூமாலை;சின்னம்-வில், அம்பு. 
 B. பாண்டியரின் துறைமுகம்-கொற்கை;மாலை-வேப்பம்பூ மாலை;சின்னம்-இரண்டுமீன்கள். 
 C. சோழரின் துறைமுகம்-புகார்;மாலை-அத்திப்பூ மாலை;சின்னம்-சிங்கம். 
 D. அனைத்தும். 

 10. பத்தினி தெய்வ வழிபாட்டை அறிமுகம் செய்தவர் யார்?????? 
 A. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் 
 B. சேரல் இரும்பொறை
 C. சேரன் செங்குட்டுவன்
 D. உதியன் சேரலாதன்

 11. அஜந்தா ஓவியங்கள் இவர்களது காலத்தைச் சேர்ந்தவை??!? 
 A. பல்லவர்கள் 
 B. சாதகவானர்கள்
 C. சாளுக்கியர் 
 D. இராஷ்டிரகூட கூடர்கள் 

 12. பல்லவர் கால கட்டிடக்கலையின் இறுதி கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டு???? 
 A. வைகுந்த பெருமாள் கோவில்
 B. மண்டகப்பட்டு
 C. காஞ்சி கைலாசநாதர் கோவில்
 D. வராஹ மண்டபம் 

 13. நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைக்க எந்த சோழ மன்னன் சைலேந்திரர்களுக்கு அனுமதி வழங்கினார்?????
 A. முதலாம் இராஜராஜன்
 B. முதலாம் இராஜேந்திரன்
 C. இரண்டாம் இராஜேந்திரன் 
 D. இரண்டாம் இராஜராஜன் 

 14. அதியந்த கர்ம பல்லவேஸ்வரக்ரம் என எந்தக் கோவில் அழைக்கப்படுகிறது????
 A. மாமல்லபுரம் கடற்கரை கோவில்
 B. மாமல்லபுரம் ஈஸ்வரன் கோவில்
 C. காஞ்சி கைலாசநாதர் கோவில்
 D. காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் 

 15. மாமல்லன் என்றழைக்கப் பட்ட பல்லவ மன்னன் யார்????
 A. முதலாம் மகேந்திரவர்மன் 
 B. முதலாம் நரசிம்ம வர்மன்
 C. மானவர்மன் 
 D. முதலாம் பரமேஸ்வரன்

 16. தவறானவையை தேர்ந்தெடுக்க???? A. கைலாசநாதர் கோவில்-முதலாம் இராஜசிம்மன் 
 B. மண்டகப்பட்டு-இரண்டாம் நரசிம்ம வர்மன் 
 C. கடற்கரை கோவில்-மாமல்லபுரம் 
 D. குடுமியான்மலை-இசைக்கல்வெட்டு 

 17. முதலாம் மகேந்திரவர்மனை ஜைன மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்????
 A. சுந்தரர்    B. சம்பந்தர்    C. அப்பர் 
 D. பெருந்தேவர் 

 18. பாண்டியர்களின் முக்கிய இறக்குமதி........... ஆகும்?????
 A. குதிரை.   B. யானை   C. தந்தம்  
 D. தங்கம் 

 19. கோவில் வழிபாடு களுக்கு பல்லவர் களால் பயன்படுத்தப் பட்ட மொழி எது???? A. தமிழ்.    B. மலையாளம்
 C. சமஸ்கிருதம்     D. தெலுங்கு

 20. மதுரை கொண்டான் என்று புகழப்பட்டவர் யார்????
 A. முதலாம் இராஜராஜன் 
 B. இரண்டாம் இராஜராஜன்
 C. முதலாம் பராந்தகன்
 D. முதலாம் ஆதித்யா 

 21. சரியான இணையை கண்டுபிடிக்க??? A. கூடல் நகரம்-பூம்புகார்
 B. கல்வி நகரம்-மதுரை
 C. தூங்காநகரம்-ஹரப்பா
 D. கோவில் நகரம்-காஞ்சிபுரம்

 22. பாண்டியர் துறைமுகம் எந்த இடத்தின் அருகில் உபரி உள்ளது????
 A. கொற்கை 
 B. அரிக்கமேடு
 C. அழகன் குளம்
 D. தொண்டி

 23. தவறான இணையை கூறுக???? 
 A. போதி தர்மர் காஞ்சி
 B. யுவான் சுவாங் காஞ்சி
 C. சுமதி காஞ்சி 
 D. தர்மபால காஞ்சி

 24. மாசாத்துவான் என்பதன் பொருள் என்ன???? 
 A. பெருவணிகன் 
 B. பெருங்கடல் வணிகன்
 C. குறுவணிகன் 
 D. இவற்றில் ஏதுமில்லை

 25. கல்வியில் கரையில் லாத காஞ்சி என்று கூறியவர் யார்????
 A. அப்பர்.     B. மாணிக்கவாசகர்
 C. சுந்தரர்.      D. சாத்தனார் 

 26. பெளத்த துறவியான மணிமேகலை தனது இறுதி காலத்தில்....... ல் கழித்தார் என்பது இதன் சிறப்புக்கு இன்னொரு சான்றாகும்?????
 A. தஞ்சாவூர்    B. புகார்    C. காஞ்சி 
 D. மதுரை

 27. கைலாசநாதர் கோவிலை கட்டிய பிற்கால பல்லவ மன்னன் யார்???? 
 A. இரண்டாம் நரசிம்மவர்மன்
 B. இராஜசிம்மன் 
 C. மூன்றாம் மகேந்திர வர்மன் 
 D. முதலாம் மகேந்திரவர்மன்

 28. புத்தகயா, சாஞ்சி போன்ற ஏழு புனித தலங்களில் காஞ்சியும் ஒன்று என்று குறிப்பிட்டவர் யார்?????
 A. இபன் பதூதா 
 B. அப்துல் ரசாக்
 C. யுவான் சுவாங் 
 D. மெகஸ்தனிஸ் 

 29. தமிழ்நாட்டின் மிகவும் தொன்மையான நகரங்கள் எவை????? 
 A. பூம்புகார் 
 B. மதுரை
 C. காஞ்சி 
 D. அனைத்தும் 

 30. சோழநாடு உள்ளடக்கிய பகுதிகளில் தவறானது எது??? 
 A. தஞ்சை, திருவாரூர்
 B. நாகை, திருச்சி 
 C. புதுக்கோட்டை மாவட்டங்கள் 
 D. நீலகிரி, கோவை

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post