1. பல்லவர் காலத்தை பற்றி அறிய உதவும் கல்வெட்டுகள் எவை????
A. மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு
B. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு
C. A மட்டும்
D. AB இரண்டும்
2. களப்பிரர்களை அழித்து பல்லவ அரசை உருவாக்கியவர் யார்????
A. முதலாம் மகேந்திரவர்மன்
B. முதலாம் நரசிம்மவர்மன்
C. சிம்ம விஷ்ணு
D. அபராஜிதன்
3. பல்லவர் காலத்தைச் பற்றி அறிய உதவும் இலக்கியங்கள் எவை???
A. நந்திக் கலம்பகம், பெரியபுராணம்
B. மத்தவிலாச பிரகடனம், அவந்திசுந்தரி கதை
C. கலிங்கத்துப்பரணி
D. அனைத்தும்
4. முதலாம் நரசிம்ம வர்மனின் படைத்தளபதி யார் சிறு தொண்டர் எனப் பிரபலமாக அறியப்பட்டார்????
A. ராஜசிம்மமன்
B. ரவிகீர்த்தி
C. பரஞ்சோதி
D. அபராஜிதன்
5. மத்தவிலாச பிரகசனம்(குடி காரர்களின் மகிழ்ச்சி) உட்பட சில நாடகங்களை எந்த மொழியில் எழுதியுள்ளார்????
A. சமஸ்கிருதம்
B. தமிழ்
C. சீனம்
D. கிரேக்கம்
6. மகேந்திரவர்மன் ஆட்சி காலத்தில் வாதாபி யை தலைநகராக கொண்ட மேலைச் சாளுக்கிய அரசன் எவருடன் தொடர்ந்து போர்கள் மேற்கொள்ளப் பட்டன????
A. முதலாம் புலிகேசி
B. இரண்டாம் புலிகேசி
C. முதலாம் விக்கிரமாதித்தன்
D. இரண்டாம் விக்கிரமாதித்தன்
7. திராவிட கட்டடக்கலைக்கு மகேந்திரவர்மன் அறிமுகப் படுத்திய புதிய பாணி எவ்வாறு அழைக்கப்படுகிறது????
A. மாமல்லன் பாணி
B. மகேந்திரவர்மன் பாணி
C. திராவிட பாணி
D. நந்தி வர்மன் பாணி
8. சீன அரசுக்கு தூது குழுக்களை அனுப்பிய பல்லவ மன்னன் யார்???
A. இரண்டாம் நரசிம்மவர்மன்
B. இரண்டாம் நந்தி வர்மன்
C. முதலாம் நரசிம்மவர்மன்
D. அபராஜிதன்
9. கட்டடக்கலைக்கு சிறப்புகளுக்குப் பெயர் பெற்ற காலம் எது???
A. பல்லவர் B. சாளுக்கியர்
C. A மட்டும் D. AB இரண்டும்
10. கீழ்க்கண்ட வற்றுள் தவறானது எது???
A. கட்டுமானக் கோவில்கள்-இராஜசிம்மன் பாணி, நந்தி வர்மன் பாணி.
B. ஒற்றைக்கல் ரதங்களும் சிற்ப மண்டபங்களும் -திராவிட பாணி
C. பாறை குடைவரைக் கோவில்கள் -மகேந்திரவர்மன் பாணி.
D. எதுவுமில்லை
11. இராஜ சிம்மேஸ்வரம் என்று அழைக்கப்பட்ட கோவில் எது?????
A. கைலாசநாதர் கோவில்
B. ஒற்றைக்கல் ரதம்
C. மாமல்லபுரம் கடற்கரை கோவில்
D. வைகுண்ட பெருமாள் கோவில்
12. தென்னிந்திய ஓவியங்கள் குறித்த ஆய்வேடான"தட்சிண சித்திரம் " யார் எழுதிய நூலாகும்????
A. இரண்டாம் நரசிம்மவர்மன்
B. இரண்டாம் நந்தி வர்மன்
C. முதலாம் நரசிம்மவர்மன்
D. முதலாம் மகேந்திரவர்மன்
13. யாரால் ஆதரிக்கப்பட்ட பெருந்தேவனார் மகாபாரதத்தை பாரத வெண்பா எனும் பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார்?????
A. இரண்டாம் நந்தி வர்மன்
B. இரண்டாம் நரசிம்மவர்மன்
C. சிம்ம விஷ்ணு
D. முதலாம் மகேந்திரவர்மன்
14. தசகுமார சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்???
A. பெருந்தேவனார்
B. தண்டின்
C. வாத்ஸ்யாயர்
D. பாரவி
15. சாளுக்கியர்கள் காலத்தை பற்றி அறிய உதவும் கல்வெட்டில் தவறானது எது??
A. மங்களேசனின் வாதாபி குகைக் கல்வெட்டு, காஞ்சி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு.
B. இரண்டாம் புலிகேசியின் அய்கோல் கல்வெட்டு, பட்டடக்கல் விருப்பாக்ஷா கோவில் கல்வெட்டு.
C. மண்டகப்பட்டு குகைக் கல்வெட்டு
D. எதுவுமில்லை
16. பாரசீக ( ஈரான்) அரசர் இரண்டாம் குஸ்ரூ யார் அவைக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பி வைத்தனர்?????
A. இரண்டாம் புலிகேசி
B. முதலாம் புலிகேசி
C. முதலாம் விக்கிரமாதித்தன்
D. இரண்டாம் விக்கிரமாதித்தன்
17. விருபாக்க்ஷாகோவில் எந்த கோவில் மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது?????
A. காஞ்சிவைகுண்ட பெருமாள் கோவில்
B. காஞ்சி கைலாசநாதர் கோவில்.
C. மாமல்லபுரம் கடற்கரை கோவில்
D. ஒற்றைக்கல் ரதம் கோவில்
18. பட்டக் கல்லில் உள்ள 10 கோவில்களில் எத்தனை கோவில்கள் வட இந்திய பாணியிலும் , தென்னிந்திய பாணியிலும் கட்டப்பட்டன?????
A. 4,6 B. 6,4. C. 2,3 D. 3,2
19. இராஷ்டிரகூட வம்சத்தை நிறுவியவர் யார்????
A. மூன்றாம் கோவிந்தன்
B. தந்தி துர்க்கர்
C. அமோக வர்னர்
D. மூன்றாம் கிருஷ்ணர்
20. சோழர்களை தக்கோலம்(தற்போதைய வேலூர் மாவட்டம்) போர்களத்தில் தோற்கடித்து தஞ்சாவூரைக் கைப்பற்றினார் யார்?????
A. அமோக வர்னர்
B. மூன்றாம் கிருஷ்ணர்
C. தந்தி துர்க்கர்
D. மூன்றாம் கோவிந்தன்
21. கீழ்க்கண்ட வற்றுள் முதலாம் மகேந்திரவர்மன் சூட்டிக் கொண்ட பட்டங்களுள் தவறானது எது????
A. சங்கீரணஜதி, மத்தவிலாசன்
B. மாமல்லன், வாதாபி கொண்டான்
C. குணபாரன், சித்திரகாரப்புலி
D. விசித்திர சித்தன்
22. எலிபெண்டாவில் எத்தனை முகம் கொண்ட சிவன் சிலை காணப்படுகிறது????
A. 3. B. 2 C. 4 D. 6
23. அமோகவர்ஷரால் இயற்றப்பட்ட கன்னட மொழியின் முதல் கவிதை நூல் எது???
A. ஆதி புராணம்
B. கிரதார்ஜீனியம்
C. கவிராஜ மார்க்கம்
D. விக்கிரமார்ஜீன விஜயம்
24. ஆதி புராணம், விக்கிரமார்ஜீன விஜயம் ஆகிய நூல்களின் ஆசிரியர் யார்????
A. ரன்னா
B. ஸ்ரீ பொன்னா
C. ஆதிகவி பம்பா
D. அனைத்தும்
25. கன்னட இலக்கியத்தின் மூன்று இரத்தினங்கள் என கருதப்படுவது?????
A. ஆதிகவி பம்பா
B. ஸ்ரீ பொன்னா
C. ரன்னா
D. அனைத்தும்
26. நாட்டைச் சரியான முறையில் வைத்த கடைசி அரசர் யார்?????
A. மூன்றாம் கோவிந்தனார்
B. தந்தி துர்க்கர்
C. அமோக வர்மனார்
D. மூன்றாம் கிருஷ்ணர்
27. இராஷ்டிரகூட வம்சம் பற்றிய கூற்றுகளுள் சரியானது எது????
A. இவ்வம்சத்தின் நிறுவியவர்-தந்திதுர்க்கர்
B. முதலாம் கிருஷ்ணர் எல்லோரா வில் கைலாசநாதர் கோவில் கட்டினார்.
C. அமோகவர்ஷர் கவிராஜ மார்க்கத்தை எழுதினார்
D. அனைத்தும் சரி.
28. தவறான இணையை கண்டறியவும்????
A. தந்தின்-தசகுமார சரிதம்
B. பாரவி-கிரதார்ஜூனியம்
C. வாத்ஸ்யாயர்-நியாயபாஷ்யா
D. எதுவுமில்லை
29. சரியான இணையை கண்டறியவும்???
A. ராஷ்டிரிய கூடர்கள்-எல்லோர குகைகள்.
B. முதலாம் நரசிம்மவர்மன்-மாமல்லபுரம்
C. சாளுக்கியர்கள்-பட்டடக்கல்
D. அனைத்தும்
30. கீழ்க்கண்ட வற்றுள் தவறாக பொருந்தியுள்ளது எது?????
A. பல்லவர்-காஞ்சி
B. ராஷ்டிடக்கூடர்-மான்யகோட்டா
C. கீழைச்சாளுக்கியர்-கல்யாணி
D. எதுவுமில்லை
Post a Comment