10th tamil ,இயல்-3 ,விருந்து போற்றதும், காசிக்காண்டம்

1. மினசோட்டா தமிழ்ச்சங்கம் அமைந்துள்ள இடம் எது???? 
 A. ஜப்பான் 
 B. மொரிசியஸ்
 C. அமெரிக்கா 
 D. இந்தியா 

 2. தொல்காப்பியர் விருந்து என்பதை என்னவென்று குறிப்பிட்டுள்ளார்????
 A. புதுமை 
 B. தொன்மை 
 C. இளமை 
 D. முதுமை

 3. தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை என்று குறிப்பிடும் நூல் எது? யாருடைய கூற்று??? 
 A. கம்பராமாயணம், சீதை
 B. சிலப்பதிகாரம், கண்ணகி 
 C. நளவெண்பா, தமயந்தி 
 D. சீவகசிந்தாமணி, காந்தருவதத்தை

 4. அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு என்று விருந்தோம்பல் பற்றி கூறும் நூல் எது????? 
 A. நற்றிணை
 B. குறுந்தொகை
 C. பரிபாடல்
 D. ஐங்குறுநூறு

 5. காலின் ஏழடிப் பின் சென்று நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு உண்டு என்பதை கூறும் நூல் எது?????
 A. பொருநராற்றுப்படை 
 B. சிறுபாணாற்றுப்படை 
 C. பெரும்பாணாற்றுப்படை
 D. கூத்தாற்றுப்படை 

 6. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்புக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது என்று குறிப்பிடும் நூல் எது???? 
 A. கூத்தாற்றுப்படை 
 B. பெரும்பாணாற்றுப்படை
 C. பொருநராற்றுப்படை 
 D. சிறுபாணாற்றுப்படை 

 7. விருந்தினரும் வறிய வரும் நெருங்கி யுண்ண மேன் மேலும் முக மலரும் மேலோர் போல -இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது????
 A. கலிங்கத்துப் பரணி
 B. தக்கயாக்கப்பரணி
 C. முக்கூடற்பள்ளு 
 D. கம்பராமாயணம்

 8. தலைவன் விருந்தளிக்க அடகும் பணையமும் வைத்த பொருட்கள் எவை எவை????
 A. புதிய வாள், கருங்கோட்டு சீறியாழ்
 B. பழைய வாள், நெடுங்கோட்டு பெரியாழ் 
 C. புதிய வாள், நெடுங்கோட்டு சீறியாழ்
 D. பழைய வாள், கருங்கோட்டு சீறியாழ்

 9. இலையை மடிப்பதற்கு முந்தைய வினாடிக்கு முன்பாக மறுக்க மறுக்க பரிமாறப்பட்ட கூடுதல் இட்லி யில் நீண்டு கொண்டிருந்தது பிரியர்களின் நீள் சரடு இது கவிதைக்குரியவர் யார்????
 A. பா. விஜய்
 B. சிநேகிதன்
 C. நா. முத்துக்குமார்
 D. அம்சப்பிரியா 

 10. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்-என்று யார் பாடியுள்ளார்? எந்த நூல்?? 
 A. ஔவையார், கொன்றை வேந்தன் 
 B. ஔவையார், ஆத்திசூடி
 C. வள்ளலார், ஜீவகாருண்ய விளக்கம்
 D. குமரகுருபரர், நீதிநெறி விளக்கம் 

 11. இட்டதோர் தாமரைப்பூ இதழ் விரித்து திருத்தல் போலே வட்டமாய்ப் புறாக்கள் கூடி இரையுண்ணும்.... இக் கவிதையை கூறியவர் யார்??
 A. பாரதியார் 
 B. பாரதிதாசன்
 C. வாணிதாசன் 
 D. நாமக்கல் கவிஞர் 

 12. திருக்குறளில் விருந்தோம்பல் அதிகாரம் இடம் பெறும் இயல்??? 
 A. இல்லறவியல்
 B. பாயிரவியல் 
 C. அரசியல் 
 D. துறவறவியல்

 13. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக யார் கூறியுள்ளார்???
 A. செயங்கொண்டார்
 B. கம்பர் 
 C. தொல்காப்பியர் 
 D. இளங்கோவடிகள்

 14. இளையான்குடி மாற நாயனாரின் விருந்தளிக்கும் திறன் பற்றி குறிப்பிடும் நூல் எது????
 A. பெரிய புராணம் 
 B. நற்றிணை
 C. கம்பராமாயணம் 
 D. சிறுபாணாற்றுப்படை 

 15. பொருந்தும் செல்வமும் கல்வியும் பூத்த லால் வருந்தி வந்தவர் க்கு ஈதலும் வைக்கலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே- என்று குறிப்பிடும் நூல் எது??? 
 A. பெரிய புராணம்
 B. கம்பராமாயணம் 
 C. மணிமேகலை
 D. சிலப்பதிகாரம் 

 16. சரியான இணையை தேர்ந்தெடு????? A. விருந்தே புதுமை-தொல்காப்பியர்
 B. சிலப்பதிகாரம்-இளங்கோவடிகள்
 C. இல்லறவியல்-திருவள்ளுவர்
 D. அனைத்தும் 

 17. விருந்தினரை போற்றி பேணல் என்று பழந்தமிழ் மரபை உணர்த்தியவர் யார்??? A. தொல்காப்பியர் 
 B. இளங்கோவடிகள் 
C. செயங்கொண்டார் 
 D. திருவள்ளுவர் 

 18. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே படைத்தவர் யார்????
 A. கபிலர்     B. திருவள்ளுவர்
 C. ஔவையார்     D. கம்பர் 

 19. விருந்தோம்பல் பற்றிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுவரோவியம் காணப்படும் இடம் எது????
 A. சிதம்பரம்    B. மதுரை   C. திருச்சி 
 D. மாமல்லபுரம்

 20. வராகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் A. கம்பர்.    B. ஔவையார் 
 C. இளங்கோவடிகள் D. தொல்காப்பியர் 

 21. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் ஆண்டுத் தோறும் கொண்டாடப்படும் விழா எது???? 
 A. வாழையிலை விருந்து விழா
 B. இறைச்சி உணவு விருந்து விழா 
 C. நவதானிய விழா 
 D. வேட்டி, சேலை உடுத்தும் விழா 

 22. காசி காண்டத்தை இயற்றியவர் யார்???? 
 A. துளசி தாசர்.     B. ஔவையார் 
 C. அதிவீரராம பாண்டியர் 
 D. பெருஞ்சித்திரனார்

 23. காசிக்காண்டத்தில் இல்ல ஒழுக்கம் பற்றிய பகுதி எத்தனையாவது பாடல்??? A. 17    B. 16   C. 15    D. 14 

 24. அதிவீரராம பாண்டியரின் பட்டப் பெயர் என்ன??? 
 A. மாறன் வழுதி     B. சீவலமாறன்
 C. மாறவர்மன்      D. சீவலப்பேரி பாண்டி 

 25. அருகுற என்பதன் பொருள் என்ன??? A. தொலைவில்.   B. அருகில் 
 C. அழுகிய     D. அழிவில் 

 26. உப்பில் லாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் என்று குறிப்பிடும் நூல் எது??? 
 A. மணிமேகலை   B. சீவகசிந்தாமணி 
 C. விவேக சிந்தாமணி D. நளவெண்பா 

 27. விருந்தோம்பல் செய்யும் இல்லற ஒழுக்கத்தின் பண்புகள் எத்தனை???
A. 6.    B. 9.    C. 8.    D. 7 

 28. நறுந்தொகை என்று அழைக்கப்படும் நூல் எது??? 
 A. காசிக்காண்டம் 
 B. வெற்றி வேற்கை
 C. கொன்றை வேந்தன் 
 D. காசிக்கலம்பகம் 

 29. வெற்றி வேற்கை என்னும் நூலின் ஆசிரியர் யார்??? 
 A. பாரி     B. அதிவீரராம பாண்டியர் 
 C. கரிகாலன் 
 D. பாண்டிய நெடுஞ்செழியன் 

 30. பொருந்தாத வற்றை கண்டறிக???
 A. நைடதம்    
B. விவேக சிந்தாமணி 
 C. வெற்றி வேற்கை 
 D. காசிக்காண்டம்

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post