1. மோசிகீரனார் முரசுக் கட்டிலில் கண்ணயரக் காரணம் என்ன???
A. களைப்பு மிகுதியால்
B. நல்ல உறக்கம் வந்ததால்
C. அரசன் இல்லாமையால்
D. குளிர்ந்த காற்று வீசியதால்
2. செய்கு தம்பி பாவலர்......... வயதில் செய்யுள் இயற்றும் திறன் பெற்றவர் ஆவார்????
A. 18 B. 15 C. 29 D. 16
3. கற்றவர் வழி அரசு செல்லும்-என்று கூறுவது????
A. காப்பிய இலக்கியம்
B. சங்க இலக்கியம்
C. பக்தி இலக்கியம்
D. நீதி இலக்கியம்
4. செய்கு தம்பி பாவலாரின் மாவட்டம்...... வட்டம்.........???
A. சென்னை, மயிலாப்பூர்
B. கன்னியாகுமரி, இடலாக்குடி
C. தஞ்சாவூர், படைத் தலைவன் குடி
D. கடலூர், மஞ்சக்குப்பம்
5. செய்கு தம்பி பாவலாரின் நினைவைப் போற்றும் வகையில் மணி மண்டபமும் பள்ளியும் அமைந்துள்ள இடம் எது????
A. இடலாக்குடி
B. சென்னை
C. கன்னியாகுமரி
D. மயிலாப்பூர்
6. இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் எது????
A. கூடனிற்காண்டம்
B. திருவால வாய்க் காண்டம்
C. யுத்த காண்டம்
D. மதுரை காண்டம்
7. செய்கு தம்பி சிறந்து விளங்கிய கலை எது?????
A. ஓவியம்
B. நாட்டியம்
C. சிற்பம்
D. சதாவதானம்
8. திருவிளையாடற் புராணம் படலங்களின் எண்ணிக்கை என்ன????
A. 64 B. 94 C. 74 D. 46
9. திருவிளையாடற் புராணம் காண்டங்களின் எண்ணிக்கை எத்தனை????
A. 4 B. 2 C. 3 D. 5
10. பரஞ்சோதி முனிவர்........ நூற்றாண்டைச் சேர்ந்தவர்???
A. 18 B. 17 C. 14 D. 16
11. திருவிளையாடற் கதைகள்........... முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது?????
A. சீவகசிந்தாமணி
B. சிலப்பதிகாரம்
C. மணிமேகலை
D. தொல்காப்பியம்
12. பரஞ்சோதி முனிவர் இயற்றாத நூலை கண்டறிக???
A. வேதாரண்யப்புராணம்
B. திருவிளையாடல் போற்றி கலி வெண்பா
C. மதுரை பதிற்றுப் பத்தந்தாதி
D. அபிராமி அந்தாதி
13. தவறான இணையை கண்டுபிடிக்க???
A. கேண்மை-நட்பு
B. முனிவு-சினம்
C. நுவன்ற- சொல்லிய
D. கவரி-கடம்பவனம்
14. மாசற விசித்த வார்புறு வள்பின்-என்று பாடிய புலவர்...... பாடப்பட்வர்........
A. மோசிகீனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
B. ஔவையார், அதியமான்
C. பாரி, கபிலர்
D. பரணர் தலையங்காணத்து செருவென்ற பாண்டி.
15. தணிந்தது-இச்சொல்லை பிரிக்கும் முறை???
A. தணி+த்+ந்+அ+து
B. தணிந்து+அது
C. தணிந்த+ அது
D. தணி+த்(ந்) +ந்+அ+து
16. குசேல பாண்டியன்......... நாட்டை ஆட்சி புரிந்தான்???
A. பாண்டிய
B. சேர
C. சோழ
D. பல்லவ
17. கீழ்க்கண்ட வற்றுள் சரியான இணையை கண்டுபிடிக்க???
A. ஆசிரியரின் டைரி-தமிழில் எம். பி. அகிலா
B. குட்டி இளவரசன் -தமிழில் வெ.ஸ்ரீ ராம்
C. சிறந்த சிறுகதை13-தமிழில் வல்லிக்கண்ணன்
D. அனைத்தும் சரி
18. சதா வதாணி என்பது....... ?
A. ஆயிரம் யானைகளை போரில் கொள்வது
B. நூறு மலர்களை ஒரே இடத்தில் குவிப்பது
C. ஆயிரம் பேருக்கு உணவிடுவது
D. நூறு வேலைகளை ஒரே நேரத்தில் செய்து காட்டுவது
Post a Comment