May current affairs

 வரலாற்றில் இன்று

  10/05/2020-ஞாயிறு


*1497* : நாடுகாண் பயணி அமெரிகோ வெஸ்புச்சி தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார்.

*1503* : கொலம்பஸ் கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த கடல் ஆமைகளை கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்டுகஸ் எனப் பெயரிட்டார்.

*1655* : இங்கிலாந்து ஸ்பெயினிடம் இருந்து ஜமைக்காவை கைப்பற்றியது.

*1768* : மூன்றாம் ஜார்ஜ் மன்னரை பெரிதும் விமர்சித்து எழுதிய ஜான் வில்கேஸ் என்பவர் சிறை பிடிக்கப்பட்டார். 

இதையடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.

*1774* : பதினாறாம் லூயி பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

*1796* : பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றார்.

2,000 ஆஸ்திரியர்கள் கொல்லப்பட்டனர்.

*1824* : லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது.

*1849* : நியூயார்க்கில் நாடக அரங்கில் இரு நடிகர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.

*1857* : உத்தரப் பிரதேசம், மீரட் நகரில் பிரிட்டிஷ் - கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக சிப்பாய்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

*1871* : பிரான்சுக்கும், புரூஷியாவுக்கும் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.

*1877* : ருமேனியா, துருக்கியிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

*1901* : லண்டனில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்திய அறிவியலார் ஜெகதீஸ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டினார்.

*1908* : அன்னையர் தினம் முதன் முதல் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் கொண்டாடப்பட்டது.

*1922* : கிங்மன் பாறையை அமெரிக்கா கைப்பற்றியது.

*1940* : வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமரானார்.

இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனி தவறுதலாக ஜெர்மனி நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.

இரண்டாம் உலகப் போர் :- பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க், ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.

இரண்டாம் உலகப்போர் :- பிரிட்டன் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.

*1941* : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் வான்படைத் தாக்குதலில் லண்டனின் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.


*1946* : அமெரிக்கா முதல் முறையாக வி-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.

ஜவஹர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார்.

*1975* : ஜப்பானில் சோனி நிறுவனம் பீட்டாமேக்ஸ் வீடியோ கேஸட் ரெக்கார்டரை அறிமுகப்படுத்தியது.

*1976* : இந்திய - இலங்கை எல்லை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

*1990* : ஆந்திராவில் வீசிய புயலில் 85 பேர் உயிரிழந்தனர்.

*1993* : தாய்லாந்தில் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலும் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

*1994* : நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.


*1996* : எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.

*1997* : ஈரானில் நிகழ்ந்த 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர்


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post