ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5.
👨🏻🏫 டாக்டர் ராதாகிருஷ்ணன் 1888ல் செப்டம்பர் 5ஆம் தேதி தமிழ்நாட்டில் திருத்தணியில் இருக்கும் சர்வபள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.
👨🏻🏫 1952 - சுதந்திர இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👨🏻🏫 1962 முதல் 1967 வரை குடியரசு தலைவராக பதவி வகித்தார். இவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராவார்.
👨🏻🏫 1954- இந்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருது வழங்கப்பட்டது.
👨🏻🏫 1948-49 அவர் யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
👨🏻🏫 1946-UNESCO-வின் தூதுவராக நியமிக்கப்பட்டார்.
👨🏻🏫 1933 முதல் 1937 வரை ஐந்து முறை தத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
👨🏻🏫 1923 இல் இவரின் அற்புதப் படைப்பான "இந்திய தத்துவம்" என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
👨🏻🏫 1948 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் பல்கலைக்கழக கல்வியின் தரத்தை ஆராய டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி குழு அன்றைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்டது.
👨🏻🏫 இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும் ராதாகிருஷ்ணன் கல்வி குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது.
👨🏻🏫 1961- இவருக்கு ஜெர்மன் புத்தக வர்த்தகத்தின் அமைதிப் பரிசு(The Peace Prize of German Book Trade) வழங்கப்பட்டது.
👨🏻🏫 1962 முதல் இவர் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
📝குறிப்பு:
✍️ 1997ம் ஆண்டு முதல் தமிழக அரசு, நல்லாசிரியர் விருதை "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" என்ற பெயரில் வழங்கி வருகிறது.
✍️ உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 5.
Post a Comment