Important Polity Notes Tnpsc questions

Art 40 கிராமப் பஞ்சயத்து. 

 • Art 41 முதுமை நோயுற்ற நிலையில் அரசு உதவி.

 • Art 42 பெண்களுக்கு பேறுகால விடுப்பு. 

 • Art 43 வாழ்க்கைக்கான கூலி. 

 • Art 44 நாடு முழுவதும் பொது சிவில் சட்டம். 

 • Art 45-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி.

 • Art 46 எஸ்.சி., எஸ்.டி.க்கு கல்வி, பொருளாதார வசதி

 • Art 47 வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்

 • Art 48 பசுவதை தடுத்தல்

 • Art 49 தேசிய நினைவுச்சின்னங்களைப் பாதுகாத்தல்

 • Art 50 நிர்வாகத்திலிருந்து நீதித்துறையை பிரித்தல்

 • Art 51 உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல். குடியரசுத் தலைவர். (PRESIDENT)
 • இந்தியாவின் முதல் குடிமகன்
 • அரசின் தலைவர் (Executive Head of the State) 
 • 42-வது சட்ட திருத்ததின்படி குடியரசுத் தலைவர் அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். (Art. 74 (I))

 • குடியரசுத் தலைவர் தேர்தல் முறை பற்றி Art 54 மற்றும் 55 குறிப்பிடுகிறது. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பது, மக்களவை, மாநிலங்களவை மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட Electoral College. 

 • பிரதமர், பிரதமரின் ஆலோசனையின் பேரில் பிற அமைச்சர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார். 

 • உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள். 
 • உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகள். • அட்டர்னி ஜெனரல். 

 • தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள். • மத்திய பொதுப்பணி ஆணையத் (UPSC) தலைவர் மற்றும் பிற உறுப்பினர்கள்.

 • மாநில ஆளுநர். • முப்படைகளின் தளபதிகள். • தலைமை தணிக்கை அதிகாரி CAG. • நிதி ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்.

 வெளிநாட்டுக்கான இந்திய தூதர்கள் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். • முப்படைகளின் தலைவர் இவரே. • போர்க்காலத்தில் போர் அறிவிப்பு செய்வதும், போர் நிறுத்தம் செய்வதும் குடியரசுத் தலைவரே.
 • ராஜ்ய சபாவுக்கு 12 பேரை நியமனம் செய்கிறார்.
 • லோக்சபாவுக்கு 2 ஆங்கிலோ இந்தியரை நியமனம் செய்கிறார். அவசரக் கால அதிகாரிகள் (EMERGENCY POWERS) நெருக்கடி நிலை அதிகாரம் 3 அவை

 • Art 352 தேசிய நெருக்கடி NATIONAL EMERGENCY • இது அமல்படுத்திய ஒரு மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். 
 • இது வரை மூன்று முறை (1962, 1971, 1975) தேசிய நெருக்கடி அமல்படுத்தப்பட்டுள்ளது. Art.356 மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி STATE EMERGENCY
 • இது அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். 
 • இதுவரை 100 முறைக்கு மேல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 • இதனை அதிக அளவில் பயன்படுத்திய பிரதமர் இந்திராகாந்தி. Art . 360 நிதி நெருக்கடி FINANCIAL EMERGENCY • நிதி நெருக்கடி இதுவரை இந்தியாவில் அமல்படுத்தப்படவில்லை. 

 • இதனை அமல்படுத்திய 2 மாத காலத்திற்குள் பாராளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்: 

 • குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையம்.
 • குடியரசுத் தலைவர் தேர்தல் தகராறுகளை தீர்ப்பது உச்ச நீதிமன்றம். 
 • குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி.
 • குடியரசுத் தலைவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்க வேண்டியது துணைக் குடியரசுத் தலைவரிடம்.
 • குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

 • Art. 57-ன் படி ஓய்வுபெற உச்சவரம்பு இல்லை. எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கப் படலாம்.
 • Art. 61-ன் படி அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டு (Impeachment) சுமத்தி பதவி நீக்கம் செய்யலாம்.

 • பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்தை கூட்டுபவர் குடியரசுத் தலைவர்.
 • பாராளுமன்றக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் லோக்சபா சபாநாயகர். 

 • முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். • முதல் துணைக் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். பாரத ரத்னா விருது பெற்ற முதல் குடியரசுத் தலைவரும் இவரே. 

 • அதிக காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். • முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன்.

 • முதல் சீக்கியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங். • முதல் தலித் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன். 

 • முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல். • பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் கே.ஆர்.நாராயணன். 

 • பீப்பிள்ஸ் பிரசிடெண்ட் மற்றும் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்னும் சிறப்புப் பெற்ற குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். • Art. 72 குடியரசுத் தலைவரின் மன்னிப்பளிக்கும் அதிகாரம். 

 • Art. 123 குடியரசுத் தலைவரின் அவசரச்சட்டம் பிறப்பிக்கும் அதிகாரம். • குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் அவசரச்சட்டம் நாடாளுமன்றம் கூடிய 6 வாரங்களுக்குள் செயல் இழந்து விடும்.

 • குறுகிய காலம் குடியரசுத் தலைவராக இருந்தவர் டாக்டர் ஜாகீர் உசேன்.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post