நாமக்கல் கவிஞர்
பிறப்பு : அக்டோபர் 19,1888( நாமக்கல் மாவட்டம் மோகனூர்).
இயற்பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை
தமிழ் அறிஞர், கவிஞர் ,விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு காந்தியை பின்பற்றியதால் இவர் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
** தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர்(1949). பதவியும் , மத்திய அரசு பத்மபூஷன் பட்டமும் வழங்கியது.
சாகித்திய அகாடமியின் தமிழ் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தார்.
பெற்றோர்: வெங்கட்ராமன் பிள்ளை, அம்மணி அம்மாள்.
வாழ்க்கைத் துணை: முத்தம்மாள், சௌந்தரம் அம்மாள்.
நாமக்கல் மற்றும் கோயம்புத்தூரில் பள்ளி கல்வி பயின்றார்பயின்றார்.
1909 இல் திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் B.A பயின்றார்.
முத்தமிழிலும் ,ஓவியக் கலையிலும் வல்லவர் சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கு பெற்றதால் சிறைத் தண்டனையும் அடைந்தார்.
* புகழ்பெற்ற முழக்கங்கள்:
1930 ஏப்ரல் 13 ல் திருச்சி to வேதாரண்யம் வரை சென்ற உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் கலந்து கொண்டு சென்றபோது போராட்டத்தை எழுச்சியூட்டும் வகையில் "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" என்ற புகழ்பெற்ற வசனங்கள் கூறினார்..
உப்பு சத்தியாகிரகம் 1930 ஏப்ரல் 28 அன்று வேதாரண்யத்தில் முடிவடைந்தது
"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதரற்க்கோர் குணமுண்டு"
"தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா"
" இந்திய நாடு இது என்னுடைய நாடே, என்று தினம் தினம் நீ அதை பாடு" -நாமக்கல் கவிஞர் பாடல்கள்
"கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் "
"அருள்நெறி அறிவைத் தர லாகும் விதி தமிழன்குரல் ஆகும்"- நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது
எழுதிய நூல்கள்:
1) மலைக்கள்ளன்( நாவல்)
2) என் கதை( சுயசரிதை)
3) சங்கொலி( கவிதை)
4) அவனும் அவளும்( கவிதை)
5) திருக்குறளும் பரிமேலழகரும்
6) திருக்குறள் புது உரை
7) கம்பனும் வால்மீகியும்
8) நாமக்கல் கவிஞர் பாடல்
*இவரின் மலைக்கள்ளன் நாவல் எம் ஜி ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது.
நடத்திய இதழ்: லோகமித்திரன்
படைப்புகள் :
இசை நாவல்கள் - 3
தன் வரலாறு - 3
புதினங்கள் - 5
மொழிபெயர்ப்புகள் - 4
கவிதை தொகுப்புகள் - 10
கட்டுரைகள் - 12
இலக்கியத் திறனாய்வுகள் - 7
சிறப்பு:
இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ்க்கு பாரதமாதா முடி சூட்டுவது போல் ஓவியம் வரைந்து தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் முதன்முதலாக வரைந்த ஓவியம் - ராமகிருஷ்ண பரமஹம்சர்
கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு அவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.
*நாமக்கல் கவிஞர் வாழ்ந்த நாமக்கலில் உள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் மாற்றியுள்ளது.
சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இறப்பு: ஆகஸ்ட் 24,1972
Post a Comment