அம்பேத்கர் பற்றிய குறிப்புகள்

அம்பேத்கர் 

 பிறப்பு: 1891 ஏப்ரல்14 மகாராஷ்டிரா- மகவு ரத்னகிரி மாவட்டம் அம்பா வாதே (தற்போது மத்திய பிரதேசம்) பெற்றோர்: ராம்ஜி சக்பால், பீமாபாய் வரைவுக் குழுவின் தலைவர், விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ,அரசியலமைப்பின் தந்தை, மிகச்சிறந்த பொருளியல் அறிஞர், அரசியல் தத்துவ மேதையாகவும் பகுத்தறிவு சிந்தனையாளராகவும் விளங்கினார்.

 அம்பேத்கார் சதாராவில் உள்ள பள்ளியில் தமது கல்வியைத் தொடங்கினார். இவருடைய ஆசிரியர் மகாதேவ் அம்பேத்கர். இவர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார் இதனால் பீமாராவ் சக்பால் அம்ப வாதேகர் என்னும் தம் பெயரை பீமாராவ்ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டார்.

 1904 ஆம் ஆண்டு அவருடைய குடும்பம் மும்பைக்கு குடிபெயர்ந்தது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார் 1907 ஆம் ஆண்டு தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் படித்து 1912 ஆம் ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றார்.

 பிறகு சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் இயல் அலுவலராக பணியாற்றி னார். பரோடா மன்னர் சாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்வி கற்க 1913ல் அமெரிக்கா சென்றார்.

 கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம் அரசியல் தத்துவம் சமூகவியல் ஆகிய பாடங்களைக் கற்றார். 1915-ல் பண்டைய கால இந்திய வணிகம் என்ற ஆய்விற்காக முதுகலைப் பட்டம் பெற்றார். 

 அச்சில் வெளிவந்த அம்பேத்கரின் முதல் நூல் (இந்தியாவின் சாதிகளில் தோற்றமும் வளர்ச்சியும்). இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியிருக்கிறது. 1920ஆம் ஆண்டு பொருளாதார படிப்பிற்காக லண்டன் சென்றார்.

 1801ஆம் ஆண்டு முதுநிலை அறிவியல் பட்டமும் . 1923 ஆம் ஆண்டு ரூபாய் பற்றிய பிரச்சனை இன்னும் ஆராய்ச்சி கட்டுரைகள் முனைவர் பட்டமும் பெற்றார். 1923 ஆம் ஆண்டு சட்ட படிப்பிற்காக பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். 

 1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பை நிறுவினார். 1927 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட பாரதம் என்னும் இதழைத் தொடங்கினார்.

 1930 ஆம் ஆண்டு நாசி கோயில் நுழைவுப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். 1930 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில் 

*" என் மக்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ அதற்காகப் போராடுவேன் அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன் என்று கூறினார்".

* சமத்துவ சமுதாயத்தை அமைக்கும் நோக்கில் இவர் சமாஷ் சமாத சங்கம் எனும் அமைப்பை உருவாக்கினார். 1931 ஒடுக்கப்பட்டோருக்கு தனி வாக்குரிமையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார். 

இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இதன் விளைவாக 1931 ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் நாள்( பூனா ஒப்பந்தம்) காந்தியடிகளும் அம்பேத்கரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 29ஆம் நாள் அரசியல் நிர்ணய மன்றம் ஒரு தீர்மானம் நிறைவேறியது. 

 அதன்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுத அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட 7 பேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு உருவாக்கப்பட்டது. ( கோபால்சாமி ,அல்லாடி கிருஷ்ணமூர்த்தி , சையது முகமது சாதுல்லா ,மாதவராவ் , கே எம் முன்ஷி, டி பி கைதான்) இக்குழு தனது அறிக்கையை 1948 பெப்ரவரி 21ல் ஒப்படைத்தது. 

ஏற்றுக்கொள்ளப்பட்டது 1949 நாவம்பர் 26. நடைமுறைக்கு வந்தது 1950 ஜனவரி இருபத்தி ஆறு. சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கர் 1952ல் பணியாற்றினார். 

 அம்பேத்கர் புத்த சமயக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் நாகூரில் லட்சக்கணக்கான மக்கள் புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 

 அவர் எழுதிய *புத்தமும் அவர் தம்மமும்* என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பிறகு 1957 ஆம் ஆண்டு வெளியானது. இறப்பு: 1965 டிசம்பர்6 பாரத ரத்னா விருது-1990 அம்பேத்கரின் பொன்மொழிகள் *" நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று முதல் தெய்வம் அறிவு இரண்டாவது தெய்வம் சுயமரியாதை மூன்றாவது தெய்வம் நன்னடத்தை"

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post