1. ஏற்றத் தாழ்வற்ற …………….. அமைய வேண்டும்.
A. சமூகம்
B. நாடு
C. வீடு
D. தெரு
2. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ………….. ஆக இருக்கும்.
A. மகிழ்ச்சி
B. கோபம்
C. அசதி
D. வருத்தம்
3. நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………
A. நிலயென்று B. நிலவென்று
C. நிலவன்று D. நிலவுஎன்று
4. தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …….
A. தமிழங்கள் B. தமிழ் எங்கள்
C. தமிழுங்கள் D. தமிழெங்கள்
5. ‘அமுதென்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………
A. அமுது + தென்று
B. அமுது + என்று
C. அமுது + ஒன்று
D. அமு + தென்று
6. ‘செம்பயிர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
A. செம்மை + பயிர்
B. செம் + பயிர்
C. செமை + பயிர்
D. செம்பு + பயிர்
7. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
A. அமுதம்
B. நிலவு
C. மணம்
D. இவைஅனைத்தும்
8. பாரதிதாசனின் இயற்பெயர் யாது?
A. சுப்புரத்தினம்
B. பாரதி
C. கனகசபை
D. பாரதிதாசன்
9. பாரதிதாசன் பிறந்த ஊர்?
A. கன்னியாகுமரி
B. கிருஷ்ணகிரி
C. தஞ்சாவூர்
D. புதுச்சேரி
10. பாரதிதாசனாரின் சிறப்புப் பெயர்கள் யாவை?
A. மகாகவி
B. புரட்சிக் கவி,பாவேந்தர்
C. கவிஞர் திலகம்
D. தேசியக் கவி
11. பாரதிதாசனாரின் காலம்
A. 29-04-1890 முதல் 21-04-1954 வரை
B. 29-04-1881 முதல் 21-04-1974 வரை
C. 29-04-1891 முதல் 21-04-1964 வரை
D. 19-04-1891 முதல் 11-04-1964 வரை
12. பாரதிதாசன் இயற்றிய நூல்கள்
A. குடும்ப விளக்கு
B. பிசிராந்தையார்
C. பாண்டியன் பரிசு
D. இவைஅனைத்தும்
13. பாரதிதாசனின் பெற்றோர் யாவர்?
A. கனகசபை,இலக்குமி
B. ஆதித்தன்,அம்பிகாபதி
C. சின்னசாமி ஐயர், இலக்குமி
D. மூன்றும்இல்லை
14. பாரதிதாசனாரின் பணி
A. புலவர் B. தமிழாசிரியர்
C. காவலர் D. விவசாயி
15. பாரதிதாசனாரின் பிறந்த தேதி
A. 29-04-1891 B. 29-04-1881
C. 19-04-1891. D. 29-05-1891
Post a Comment